05 February, 2015

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?



பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம். பெரும்பாலான திருமணமான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.



வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது. இந்திய காவியமான இராமயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து சென்ற பொழுது, இராமனுக்கு அடையாளமாய் சீதை தன் கால் மோதிரமான மெட்டியை (கணையாழியை) கழற்றி எறிந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அப்பொழுது இருந்தே பெண்கள் மெட்டி அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம். மேலும் மெட்டியை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தியவர் மார்ஜொரி போரேல் என்பவர். இந்தியாவில் இருந்து திரும்பி சென்றவுடன் 1973ல் நியூயார்க்கில் மெட்டி வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டார். அவர் முதன் முதலில் ஆரம்பித்த மெட்டி கடை நியூயார்க் 59வது தெருவில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...