நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். காரணம் என்ன? நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது. இதயத் திசுக்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு. இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும். ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது. இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது. இதய வலி - அறிகுறிகள் மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும். மாரடைப்பு - அறிகுறிகள் சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction). தூண்டும் சூழல்கள் இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன. அவை: பரம்பரை, அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது ((எ-டு ) மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (( எ-டு ) கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை). யாருக்கு அதிக வாய்ப்பு? புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. நுரையீரல் நோய்கள் ‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக் காற்று நோய் (Pneumo thorax), நுரையீரல் உறை அழற்சி நோய் (Pleurisy), கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும்; பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது. நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது சளியில் ரத்தம் கலந்து வரும். இது பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும். மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் மாரடைப்பிலிருந்து மற்ற பிரச்சினைகளைப் பிரித்துணரலாம். நுரையீரல் ரத்த உறைவுக் கட்டி (Pulmonary embolism) காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். இது பெரும்பாலும் ரத்தக் குழாய் நோயுள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், நீண்டகாலமாகப் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு ஏற்படுவதுண்டு. தசை / எலும்பு வலிகள் மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடைத் தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாகவும் நெஞ்சில் வலி ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். மார்பில் அடிபடுவது, தசைப் பிசகு, மார்பு / விலா எலும்பு முறிவு போன்றவை இவ்வகை நெஞ்சு வலியை உண்டாக்கும். உணவுப்பாதை புண்கள் தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய் இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். பொதுவாக, இந்த நோயாளியிடம் உணவுக்கும் நெஞ்சு வலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடியும். இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். காரணம் என்ன? நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும். மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழைய சல்லடை வலை போல ‘தொள தொள' வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும். இந்த நிலைமையில் உள்ள நெஞ்செரிச்சலுக்குத் தகுந்த சிகிச்சை பெறத் தவறினால், இரைப்பையில் புண் உண்டாகும். அப்போது அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரத்திலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவு சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலிக்கிறது. பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும். உளவியல் காரணங்கள் குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது. பிற நோய்கள் மகாதமனிக் குழாய் வீக்கம், இதய வெளியுறை அழற்சி நோய், அக்கி அம்மை, அஜீரணம், கணைய நோய், பித்தப்பை நோய், கடுமையான ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். பரிசோதனைகள் என்ன? வழக்கமான ரத்தப் பரிசோதனை களுடன் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்படும். இவை தவிர, மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., எக்கோ, சி.டி. ஸ்கேன், டிரெட்மில், எண்டாஸ்கோபி போன்ற பரிசோதனைகளும் தேவைப்படும். இவற்றின் மூல காரணம் அறிந்து, சிகிச்சை பெற்றுவிட்டால் நெஞ்சு வலி விடைபெற்றுக்கொள்ளும். இதய வலிக்கு முதலுதவி இதய வலி அல்லது மாரடைப்புக் கான அறிகுறிகள் தெரியவரும்போது உடனடியாக ஆஸ்பிரின் 325 மி.கி., அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடோகிரில் 150 மி.கி. ஆகியவற்றைச் சாப்பிட்டால், தமனி ரத்தக் குழாயில் ரத்தம் உறைவது தடுக்கப்படும். இதன் பலனாக மாரடைப்பின் தீவிரம் குறைந்து நெஞ்சில் வலி குறையும். இந்த முதலுதவியைத் தொடர்ந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறோமோ அந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்து வருவதைத் தடுக்க முடியும். தடுக்கும் முறைகள் :- * புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான்மசாலாவைப் பயன்படுத்தக் கூடாது. * சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். * தினமும் முறையாக உடற்பயிற்சி / யோகாசனம் / தியானம் செய்ய வேண்டும். * உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்புக் கோளாறு போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்து, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். * கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். * மாசடைந்த சுற்றுச்சூழலைத் தவிருங்கள். அசுத்தமான காற்றுதான் பல நுரையீரல் நோய்களுக்குக் காரணம். * அசுத்தமான உணவைச் சாப்பிடாதீர்கள். * இரைப்பைப் புண் உள்ளவர்கள், சமச்சீரான உணவை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது; விரதம் வேண்டாம்; நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் முக்கியம். * வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவை அதிகமாக உட்கொள்ளுங்கள். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக இனிப்புப் பண்டங்கள், புளித்த உணவு ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள். * நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கப் போவது நல்லது. படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடிவரை உயர்த்திக்கொள்வது நல்லது, * மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களுக்குத் தரப்படுகிற ஸ்டீராய்டு மாத்திரைகள், மூட்டுவலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. * மன அழுத்தம் தவிருங்கள். * தேவையான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். * நெஞ்சில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது. .
Showing posts with label செய்திகள். Show all posts

18 August, 2015
நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?

26 July, 2015
காட்டுத்தனமான காட்டு தீ!
வனத் துறை அலுவலர்களை அதிகம் பயமுறுத்துவது `காட்டுத் தீ’தான். காடுகளில் மரங்கள் நெருக்கமாக அமைந்திருப்பதாலும், உதிர்ந்த இலைகள் பெரும் அடுக்காகக் காணபடுவதாலும் தீ வேகமாக பரவி விடுகிறது. அதுவே பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. காட்டுத் தீ ஏற்படும்போது எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும் பலியாகி விடுகின்றன. மதிப்புமிக்க வனவளம் இழக்கபடுகிறது.
காட்டுத் தீக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில இயற்கை யானவை. சில, மனிதர்களால் ஏற்படுபவை.
இயற்கைக் காரணங்கள்:
மின்னல், எரிமலைச் சீற்றம், மிகவும் வறண்ட கோடைக் காலம் அல்லது வெப்ப அலைகள் காட்டுத் தீயை ஏற்படுத்தலாம். கோடை காலத்தில், மரக் கிளைகள் உரசிக்கொள்ளும் சாதாரண நிகழ்வு கூட காட்டுத் தீக்கு வித்திட்டு விடலாம்.
மனிதனால் ஏற்படுபவை:
பெரும்பாலான காட்டுத் தீ விபத்துகளுக்குக் காரணம் மனிதர்கள்தான். காட்டு பகுதியில் சுற்றுலா செல்பவர்களும், தற்காலிகமாக முகாம் அமைத்துத் தங்கு பவர்களும் தீயைச் சரியாக அணைக்காமல் விட்டு விடலாம். யாரோ ஒருவர் அணைக்காமல் விட்டெறியும் சிகரெட் துண்டும் காட்டுத் தீக்குக் காரணமாகிவிடலாம்.
இந்தியாவில், மரங்களில் இருந்து நல்ல சாகுபடியை பெற கிராமத்தினரும் மலைவாசி மக்களும் மரங்களுக்கு அடியில் உள்ள செடிகளுக்குத் தீ வைப்பது வழக்கம். சில கிராமபுறத்தினர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் `மாகுவா’ விதைகளைச் சேகரிக்கின்றனர். எளிதாக விதைகளைச் சேகரிப்பதற்காக அவர்கள் மரங்களுக்கு அடியில் உள்ள பரப்பில் தீ வைத்துவிடுகிறார்கள். அந்தத் தீ பல சமயங்களில் எளிதாக பக்கத்தில் உள்ள காட்டுக்கு பரவி விடுகிறது. அப்போது எழும் பெரும் புகையானது காற்றை மாசுபடுத்துவதுடன், மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.
காடுகளுக்கு அருகே வசிக்கும் பெரும்பாலான மக்கள் காடுகளில் இருந்து கிடைக்கும் பழங்கள், முலிகைகள், விறகுகளையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக் கின்றனர். காட்டுத் தீ அவர்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. காட்டுத் தீயைத் தடுப்பது எப்படி?
காட்டுத் தீயை அணைப்பதற்கும், அது மேலும் பரவாமல் தடுப்பதற்கும் தீயணைப்பு வீரர்கள் பல சிறப்பு உத்திகளை பயன்படுத்துகின்றனர். தீயை ஒரு குறிபிட்ட பகுதிக்குள் கட்டுபடுத்தும் வகையில் வனத் துறையினர் `தீ தடுப்புக் கோடுகளை’ உருவாக்குகின்றனர். அகன்ற பாதைகளாக மரங்கள், தாவரங்கள் அகற்றபடுகின்றன. குறிப்பாக கோடை காலத்துக்கு முன் இப்பணியில் கவனம் செலுத்தபடுகிறது. அப்போது காட்டில் நெருப்பு பற்றிக் கொண்டாலும் தீ தடுப்புக் கோட்டைத் தாண்டாது.
காட்டு பகுதியில் ரோந்து செல்லும் வனக் காவலர்கள் எங்காவது நெருப்பு அல்லது புகை தென்படுகிறதா என்று பார்க்கிறார்கள், அவ்வாறு எதுவும் காணப்பட்டால் உடனடியாக எச்சரிக்கை விடுக்கிறார்கள். அதன் முலம் தீ ஆரம்பகட்டத்திலேயே தடுக்கபடுகிறது.
காட்டுத் தீ எரியும் பகுதிக்கு அருகில் உள்ள மரங்களை வனக் காவலர்கள் வெட்டுவதும் உண்டு. அதன் முலம் தீ பரவுவது தடை செய்யபடுகிறது.
காட்டுக்குள் தீயணைப்பு வண்டிகளைக் கொண்டு செல்வது கடினம் என்பதால், சில வேளைகளில் ஹெலிகாப்டர் முலம் தீ தடுப்பு வேதிபொருட்களும், தண்ணீ ரும் கொட்ட படுகின்றன. தீயை அணைப்பதுடன் வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆட்களின் பணி முடிந்துவிடுவதில்லை. ஆங்காங்கே நெருப்புக் கங்கு எதுவும் எஞ்சியிருக் கிறதா என்று ஆய்வு செய்து அவற்றை முற்றிலுமாக அணைக்கிறார்கள்.

தீ விபத்து ஏற்படும்போது நான் யாரை அழைக்க வேண்டும்?
தீப்பற்றி எரிவதை அறிவிக்க அல்லது தீயணைக்கும் ட்ரக் வண்டி தேவைப்படின் உடனடியாக நீங்கள் 911 இலக்கத்தொலைபேசியை அழையுங்கள். தீப்பற்றல் அவசரகால நிலைமை எனக் கருதப்படுவதோடு அது உடனடியாக அறிவிக்கப்படவேண்டும்.
911 இயக்குனர் கீழ்வருபவை போன்ற சில அடிப்டையான கேள்விகளை உங்களிடம் கேட்பார்:
- "தீ விபத்து எங்கே ஏற்பட்டது?
- "எப்போது தீப்பற்றி எரியத்தொடங்கியது?
- " தற்போது என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது?"
- " யாராவது உள்ளே சிக்குண்டு இருக்கின்றார்களா?"
- "ஏதாவது வளர்ப்புப் பிராணிகள் அதில் சிக்கிண்டு இருக்கின்றனவா?"
தொலைபேசியில் நீங்கள் அழைக்கும்போது:
- அமைதியாக இருந்து, தெளிவாகப் பேசுங்கள்.
- என்ன நடைபெறுகிறது என்பதை விபரித்துக் கூறுங்கள்.
- உங்கள் இருப்பிடத்தை மிகச் சரியாகக் கொடுங்கள்( உதாரணமாக,263, பிரதான வீதி, வதிவிட இலக்கம் 216).
- தொலைபேசியை வைக்கும்படி கூறப்படும்வரை தொலைபேசியைநீங்கள் வைக்க வேண்டாம் .
- உங்களுக்குத் தேவைப்படின் ஒரு மொழி பெயர்ப்பாளர் அல்லது ஒரு பேச்சு மொழி பெயர்ப்பாளரைக் கேளுங்கள்.
தீப்பற்றி எரிதலைத் தடுப்பதற்கு உங்கள் வீட்டில் புகை எச்சரிக்கை மணி ஓசை (1) சரியாகச் செயற்படுகிறதா என்பதையும் உங்கள் வீட்டில் மிக அண்மையில் உள்ள வெளியேறும் வழிகளைச் சரியாக அறிந்து வைத்திருப்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் தீ பற்றி எரிந்தால் உடனடியாக வெளி யேறுவதற்கு அது உங்களுக்கு இடமளிக்கும். தீபெருமளவு பரவிவிடுவதற்கு முன்பு அணைத்து விடுவதற்கு தீயணைக்கும் கருவியை வைத்திருப்பது அவசியமாகும் (2) (அதை வைப்பதற்கு மிகப்பொருத்தமான இடம் சமயலறையாகும்.)
தொலைபேசியில் ஆபசமாக பேசுபவரா? எச்சிரிக்கை
நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / கா...
Posted by Manimaran on Saturday, July 25, 2015
பெண்கள் அணியும் அணிகலங்களின் பயன்கள்!
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகள் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளை கொண்டிருப்பவை. அதுபோல நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேண...
Posted by Manimaran on Saturday, July 25, 2015
09 July, 2015
சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி ஒரு சுருக்கமான 'நச்'சென்ற பார்வை:
சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி ஒரு சுருக்கமான 'நச்'சென்ற பார்வை:பெயர்:உ.சகாயம்பிறப்பு:பெருஞ்சுணை கிராமம். ஊழலிலேயே ப...
Posted by Madhu Mitha on Friday, September 19, 2014
பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. .
கூச்ச சுபாவமுள்ள, இதய பலகீனமுள்ள ஆண்கள் தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம். இந்தக் கட்டுரை பிரா அணிய விரும்பாத, பிரா ப...
Posted by Manimaran on Wednesday, July 8, 2015
புடவை கட்ட ஆசை உள்ள பெண்கள் அறிந்து கொள்ள,...
இது பெண்களுக்கான பகுதி. ஆண்களுக்கு இங்கு வேலை இல்லை.புடவை கட்டத் தெரியாத, புடவை கட்ட ஆசை உள்ள பெண்கள் அறிந்து கொள்ள...
Posted by Manimaran on Wednesday, July 8, 2015
Subscribe to:
Posts (Atom)
சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?
சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...
-
காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம...
-
இது நரியின் சம்பந்தபட்ட பக்கம்தான் ! தலைப்பு விஷயம் கடைசியில்தான் வரும் !! நரிகளின் காதல் வித்தைகள் நீண்ட காலமாக ரகசியமாகவே இருந்ததது . மேல...
-
ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை பாலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ...