10 March, 2012

புகைப் பிடிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய இடுகை!



புகைப் பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்!

முடி :
  • நிற மாற்றம்
மூளை :
  • பாரிசவாதம்
  • புகைத்தலுக்கு அடிமையான நிலை
கண் :
  • பார்வைக் குறைபாடு
  • Cataracts
மூக்கு :
  • மன நுகர்ச்சித் தன்மை குறைதல்
தோல் :
  • தோல் சுருக்கம்
  • வயது முதிர்ந்த தோற்றம்
பல் :
  • நிற மாற்றம்
  • பதிவுகள்
  • பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (gingivitis)
வாய் மற்றும் தொண்டை :
  • உதடு மற்றும் தொண்டை புற்று நோய்
  • உணவுப் பாதை புற்று நோய்
  • சுவை நுகர்ச்சி குறைதல்
  • கெட்ட வாசனை
கை :ரத்த ஓட்டம் குறைதல்
நிக்கேட்டின் படிவுகள்

சுவாசப் பை :
  • சுவாசப் பை புற்று நோய்
  • நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD)
  • சுவாசப் பைத் தொற்று(நியுமோனியா)
  • கச ரோகம் (டப்)
  • ஆஸ்துமா
இதயம் :
  • மாரடைப்பு
ஈரல் :
  • புற்று நோய்
வயிறு :
  • அல்சர்
  • குடல் , இரப்பை,சதையி புற்று நோய்
  • நாடி வெடிப்பு(Aortic அனஐர்ய்சம்)
சிறு நீரகம் :
  • புற்று நோய்
  • சிறு நீர்ப் பை புற்று நோய்
எலும்பு :
  • எலும்பின் உறுதி குறைதல்
இனப்பெருக்கத் தொகுதி :
  • விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை குறைதல்
  • குழந்தையின்மை
  • ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல்
இரத்தம் :
  • புற்று நோய்
கால் :குருதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் நோய் மற்றும் காயம் ஏற்படல்


  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்

இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை நினைத்துக் கொண்டே ஆனந்தமாக? புகை பிடியுங்கள் ....

ஒரு கொசுறு செய்தி!



தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.

மிகவும் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழம், புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து. ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது.

இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி...

01 March, 2012

பால் ஆடை-சருமத்திற்கு நல்லது


பாலில் நமக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன. கால்சியம், புரோட்டீன் மற்றும் -ஊட்டச் சத்து அதிகமுள்ள பாலைப் பருகுதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. பால் உடலுக்கு எப்படி சக்தியைக் கொடுக்கிறதோ, அப்படியே நம் சரும அழகுக்கும் பால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பால் சிறந்த மாய்சரைசராகவும், க்ளென்சராகவும் பயன்படுகிறது.

சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் பால் உதவும். ஆடை எடுக்கப்பட்ட பால் எல்லாவித சரும வகைக்கும் ஏற்றது. முகத்தில் பேக் போடும் பவுடருடன்,பால் கலந்து உபயோகிக்கலாம். ஏடோடு இருக்கும் பால் உலர் சருமத்திற்கு ஏற்றதாகும். எண்ணெய் சருமத்திற்கு ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது மோர் உபயோகிக்கலாம். கண்களின் அடியில் உள்ள கருவளையத்தைப் போகக்க பாலாடை க்ரீம் பூசுவது நல்லது.

இது வெளியில் தனியாகக் கிடைக்கும்) தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுபவர்களுக்கும் அதிகமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கம் பால் நல்லது. காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் பூசி சிறிது நேரத்தில் குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பளிச்தான். மோர் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மோரில் பஞ்சை நனைத்து முகம், கழுத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

பல அழகுக் குறிப்புகளில் மோரின் உபயோகம் கொடுக்கப்பட்டிருக்கிறது). தயிர் தயிரை முகத்தில் அப்படியே தடவினால் அதிலுள்ள கொழுப்புச் சத்து சருமத் துவாரங்களை அடைத்து விடும். குறிப்பாக எண்ணெய் சருமம் உடையவர்கள், தயிரை முகத்திற்கு உபயோகிக்கக்கூடாது. தலை முடிக்கு தயிரை சிறந்த கண்டிஷனராக உபயோகப்படுத்தலாம். மருதாணிப் பவுடர் + தயிர் அல்லது வெந்தயப் பவுடர் + தயிர் உபயோகப்படுத்தி தலைத் தேய்த்து முடியை அலசலாம்.

வெண்ணெய் கடையில் வாங்கும் வெண்ணெயை விட வீட்டிலேயே சேர்த்துத் தயார் செய்யும் வெண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. முகத்திற்கு மசாஜ் செய்ய வெண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் வெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். வெண்ணெயைத் தலையில் தேய்த்து தலைமுடியை அலசலாம். உதடுகள் கறுப்பாக இருப்பவர்கள் சிறிதளவு வெண்ணெயை உதட்டில் தினமும் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் உதட்டிலுள்ள கருமை நிங்க, இயற்கையான ரோஸ் நிறம் கிடைக்கும். இதை தடவி அதை தடவி எலி கிலி பிறாண்டி விட்டு உள்ளதும் முதலுக்கே மோசம் ஆகிவிட்டால் நாங்கள் பொறுப்பல்லா! ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள்!!

19 February, 2012

இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.

மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும்.


10 February, 2012

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?

ஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது  இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.
 

நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.


08 February, 2012

உங்கள் குழந்தை கோபத்தில் தலையில் அடித்துக் கொள்கிறதா?ஏன்?

சில குடும்பங்களில் வளரும் குழந்தைகள் மிகுந்த கோபம் கொண்டவர்களாக வளர்கின்றனர். ஆக்ரோஷமாக வளரும் இக்குழந்தைகள் ஏதேனும் பிரச்சனை வரும் போது தலையை சுவரில் மோதிக் கொள்வதும் கைகளால் தன் முகத்தில் தானே அறைந்து கொள்வதும் சாதாரணமான நடத்தையாகும். குழந்தைகளின் இக் கோப நடத்தையை எப்படி சரி செய்வதென்று தெரியாமல் பெற்றோர் மனக்கலக்கம் அடைந்து இருப்பர்.

தலையில் அடித்துக் கொள்ளும், தலையை சுவரில் மோதிக் கொள்ளும் குழந்தைகளின் பெற்றோர்களில் தாயோ, தந்தையோ யாராவது ஒருவர் மிகுந்த கோபம் கொண்டவர்களாக இருப்பர். பெற்றோர்களின் இக்கோபத்தை பார்த்தே குழந்தை ஆக்ரோஷமாக நடந்துகொள்ள பழகிக்கொள்கிறது. மேலும் குடும்பத்தின் ஒற்றைக் குழந்தைகளே இது போன்ற நடத்தைகளில் ஈடுபடுகின்றன. ஒரு குழந்தை என்பதால் அதிகமான செல்லம் கொடுக்கும் பெற்றோர் குழந்தை எதைச் செய்தாலும் அவர்களிடம் எதிர்மறையாக நடந்து கொள்வதில்லை. அதன் காரணமாக குழந்தைகளின் கோப நடத்தை அதிகமாகிக் கொண்டே செல்லும்.

01 February, 2012

சில ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது?


ஆண்களுக்கு மார்பகம் வளர்வதை மருத்துவ ரீதியாக
Gynecomastia என்று சொல்வார்கள். அதாவது மார்பகச் சுரப்பிகளும், கொழுப்பு தசைகளும் வளர்ந்து பெண்களுக்கு உள்ள மார்பகம் போலவே காட்சியளிக்கத் தோன்றும்.
ஆண்களுக்கு ஏன் மார்பகம் வளர்கிறது?

ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன். டேச்டோஸ்டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனால் ஆண்களுக்கு டேச்டோஸ்டிரோன் அதிகமாகவும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும்.
டீன் ஏஜ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அபரிமிதமாக சுரக்கும், இது மிகவும் இயல்பான விசயமே. இதனால் தான் டீன் ஏஜ் பருவத்தில், ஆண்களுக்கு மார்புகள் சற்றே பெரிதாகும், முலைகள் வீங்கி காணப்படும். இது ஆறு மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் வரை இருக்கும், பின்பு சரியாகி விடும்.அதனால் டீன் ஏஜ் பருவத்தில் உங்கள் மார்பகம் பெரிதானால் கவலைப்பட ஒன்றுமில்லை.


உங்களுக்கு மார்பகம் பெரிதாகவே இருந்தாலோ, அல்லது இருபது வடக்கு மேல் மார்பகம் பெரிதானாலோ, இதற்கு வேறு காரணங்கள் உண்டு. அவை:

1. டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நிரந்தரமாகி விடுவது.

2. உடல் பருமன். நீங்கள் குண்டாக இருந்தால், கொழுப்பு சத்து மார்புக்கு அருகே தங்கி விடுகிறது. உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனை இல்லா விட்டாலும், கொழுப்பு மட்டுமே சேர்ந்து மார்பகம் போல காட்சியளிக்கும்.

3. குடிப்பழக்கம்.

4. போதை மருந்து-கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களை உட்கொள்வது.

5. வேறு நோய்களுக்காக டாக்டர்கள் கொடுக்கும் மருந்துகள்.
– ரத்தக் கொதிப்பு, மன நோய், அஜீரணம் போன்றவைக்காக கொடுக்கப்படும் மருந்துகள்.
– தலைவலி, உடல்வலி, காய்ச்சலுக்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள்.
– மூலிகை மருந்துகள் பலவற்றில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மறைந்துள்ளது.
– உடல் தசை வளர்வதற்காக (பாடி பில்டிங்) நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள், அல்லது ஊசிகள்.

6. ஈரல் நோய் (Cirrhosis)

7. சிறுநீரகக் கோளாறு.

8. தைராய்ட் சுரப்பிக் கோளாறு (இது தொண்டைக்கு முன்னால் இருக்கும் சுரப்பி)

9. விறைப்பை அல்லது பிராஸ்டேட் (Prostate) புற்று நோய்.

10. வயதாவதால் ஆண்மைச் சுரப்பி குறைந்து போதல்.

ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. அதுவும் மார்பக வளர்ச்சி போலவே இருக்கும்.

ஆண்கள் மாற்பகத்தால் வரும் பிரச்சனைகள்:

1. முலையில் வலி, அல்லது திரவம் வெளியாதல்.

2. மற்றவர்கள் செய்யும் கிண்டல், கேலி போன்றவற்றால் மன உளைச்சல்.

3. இந்தப் பிரச்சனையினால், பெண்களை அணுகுவதில் பயம் ஏற்படுதல்.

மருத்துவரை அணுகுங்கள்:

* எது, எப்படியாக இருந்தாலும், வெட்கப்படாமல் மருத்துவரிடம் காட்டி செக்கப் செய்து கொள்ளுங்கள்.

* இது டீன் ஏஜ் பருவத்தில் ஏற்பட்டால், மருத்துவர்கள் ஒரு
2-3 வருடங்கள் பொறுத்து, திரும்ப வரச் சொல்வார்கள். இது அதற்கு மேலும் தொடர்ந்து இருந்தாலோ, அல்லது வலி மற்றும் சீழ் வெளியானாலோ உடனே மருத்துவரிடம் திரும்பச் செல்லுங்கள்.

* நீங்கள் சாப்பிடும் மருந்துகளை ஆராய்ந்து பாருங்கள்.

* நீங்கள் நடுத்தர வதில் இருந்தால், உங்களுக்கு வேறு ஏதும் நோய் இருக்கிறதா என்று செக்கப் செய்துகொள்ளுங்கள். மற்ற நோய்களும், உங்கள் மார்பகம் வளரக் காரணமாக இருக்கலாம்.

* குடி, மற்றும் போதைப் பழக்கம் இருந்தால், அவற்றைக் கை விடவும்.

சிகிச்சை முறைகள்:

1. டீன் ஏஜ் பருவத்தில் நடந்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மன ரீதியாக ஆறுதல் கூறினாலே போதுமானது.

2. ஈஸ்ட்ரோஜென் சுரப்பதை தடுக்க நிறைய மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளன. உதாரணமாக Tamoxifen, Raloxifen போன்றவை.

3. அறுவை சிகிச்சை மூலம், மார்பகத்தை அகற்றுவது.

4. மன ரீதியான ஆறுதலையும், அரவணைப்பையும் குடும்பத்தினரும், நண்பர்களும் கொடுக்க வேண்டும். இது குறித்து, மேலும் கேள்விகளோ, அல்லது அல்லது தகவலோ தேவைப்பட்டால் askthisdoctor.com தளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

08 January, 2012

கொசு, கொசு, கொசு,






காட்டை மனிதன் அழித்தான். தங்களது இருப்பிடத்தை ஆக்கிரமித்த மனிதனை பழிவாங்க யானைகளும், சிறுத்தைகளும், எருமைகளும் தமிழ்நாட்டின் வனங்களை ஒட்டியுள்ள ஊர்களுக்குள் நுழைந்து துவம்சம் செய்ய தொடங்கி விட்டன.
குளு குளு கொடைக்கானலில் காட்டெருமைகளை காட்டுக்குள் தான் காணமுடியும். இப்போது அவைகள் நடுரோட்டில் வலம் வருகின்றன. மனிதர்கள் மிரண்டு போய் நிற்க வேண்டியுள்ளது. வனத்தை அழிக்கும் போது அவை இரை தேடி நடு ரோட்டுக்கு வருவது இயற்கை தான். இந்த விலங்குகளுடன் சேர்ந்து மனிதனை மிரட்ட வந்த ஒரு ----ப்பூ......உயிரினத்தை மனிதர்கள் கண்டு கொள்ளாமல் விட்டது தான் துரதிர்ஷ்டம். அது தான் கொசு. நாம் கேட்கிறோமா இல்லையா என்பது பற்றியெல்லாம் இந்த கொசுவுக்கு கவலை இல்லை. காதுக்கருகில் வந்து நாரசாரமாக ங்கொய்................என்று பாட்டு பாடுவது, பாடி விட்டு ரத்த தாகம் எடுக்கும் போது கடிப்பது என்று மனிதனை பாடாய் படுத்துகின்றன.

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...