13 June, 2012

வலி நிவாரணியாக செயலாற்றும் பால்!

பாலின் மகத்துவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏற்கனவே ஏகப்பட்ட தகவல்களை தெரிவித்துள்ள போதிலும், தற்போது பால் வலி நிவாரணியாகவும் செயல்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஒரு டம்ளர் பாலில் 20 வகையான வலி நிவாரணிகள் குணத்தை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மிக மிக நுட்பமாக மேற்கொண்ட ஆய்வில், மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கு மருந்தில் காணப்படும் இரசாயனங்கள், ஆடு, மாடு மற்றும் மனித பாலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஒரு டம்ளர் பாலை ஒருவர் அருந்தினால், அதில் இருக்கும் இரசாயனம் மிக மிக குறைவாகவே உள்ளது. ஆனால் அதன் பயன் அபரிதமாக உள்ளது.குறிப்பாக வலி நிவாரண விசயத்தில் அற்புத பங்காற்றுவதாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஸ்பானிஷ்-மொராக்கான் பகுதியை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழுவினர், அந்த பகுதிகளில் உள்ள பசு மாட்டு பால் மாதிரிகளை, ஆடு மற்றும் மனித பால் மாதிரிகளுடன் சேர்த்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தெரியவந்த உண்மை என்னவெனில், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் வலி நிவாரணியில் அடங்கியுள்ள எதிர்ப்பு அழற்சி மருந்து, "Mefenamic" அமிலம் மற்றும் "Ketoprofen" ஆகிய இரசாயனங்கள் அடங்கியுள்ளது என்பதுதான்.
மேலும் செக்ஸ் ஹார்மோனின் வடிவமாக உள்ள ஈஸ்ட்ரோஜனும் பாலில் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஆட்டுப்பாலில் "Niflumic" என்ற ஒரு வகையான அமிலம் இருப்பதும், இது தாய்ப்பாலில் உள்ள வலி நிவாரணி குணங்களை ஒத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

2 comments:

  1. நல்ல தகவல், இதில் மனிதர்கள், மிருங்ககள் உட்கொண்ட மருந்துகள் எதுவும் கலந்து வந்துவிடவில்லையே?

    ReplyDelete
  2. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    நல்ல தகவல், இதில் மனிதர்கள், மிருங்ககள் உட்கொண்ட மருந்துகள் எதுவும் கலந்து வந்துவிடவில்லையே?
    நீங்கள் வருகை புரிந்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டால் இதுதான் எங்களுக்குக்கு டானிக். நீங்கள் கூறுவது போல் இந்தியாவில் உள்ள பால்களில் கால்நடைகளுக்கு கொடுக்கும் மருந்துகளின் கசடுகள் இருக்கத்தான் செய்கிறது! இந்த ஆராய்ச்சில் பயன்படுத்திய பசுக்கள் மருந்துகள் உட்கொள்ளாதது!!

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...