தற்கொலைக்குத் தூண்டும் மன அழுத்தம்


          நேரத்துக்கு தக்கவாறு மனநிலை மாறுதல் சாதாரனம். ஆனால் வெறுமையும் நம்பிக்கையின்மையும் மனதை சூழ்ந்து கொண்டு மனதை விட்டு அகலாவிட்டால் அது மன அழுத்தம் ஆகும்.
          நம் வேலைத் திறனும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் மன அழுத்தத்தால் தொலைந்து போகும் என்பது நிச்சயம். .நண்பர்களையும் பிடிக்காது. பொழுது போக்கும் பிடிக்காது. அதிகம் சோர்வடைவீர்கள். ஒரு நாள் பொழுது கழிவதே கடினமாக உணர்வீர்கள். நம்பிக்கையின்மையும் கவலையும் அதிகரிக்கும். ஆனால் அன்பும் ஆதரவும் கிடைக்கம்போது சற்று நன்றாக உணர்வீர்கள்.ஆகையால் மன அழுத்தம் என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடப்பதே அதனின்று விடுபட சிறந்த வழியாகும்.
          நம் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள்,,தோல்விகள், நம்பிக்கை துரோகமும்  நமக்கு கவலையும் சோகத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தும். ஆனால் மன அழுத்தம் என்பது இதைவிட மேலான சமாச்சாரம். மன அழுத்தம் கொண்டவர்கள் இருட்டு குகையில் வாழ்வதாகவே அர்த்தம். ஆனால் சிலர் விசனப்படமாட்டார்கள். அவர்கள் வெறுமையில் வாழ்க்கையே இல்லை என நிணைத்துக் கொண்டு உணர்ச்சியற்று எதிலும் அக்கறையில்லாத நிலையில் இருப்பர்.
          ஆண்கள் அதிகம்  கோபப்படுவார்கள்,  படிப்பு, வேலைத்திறன், சாப்பாடு, தூக்கம், சந்தோசம், ஜாலி எல்லாமே போய்விடும். அட மொத்தத்தில் செத்துப் போகலாமுன்னு தோனும்                                    
          யாருமே உதவமாட்டார்கள் என்ற மன நிலையும் தான் எதற்குமே உதவ மாட்டோம் என்றும் தனக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் சின்ன விஷயங்களை பெரிது படுத்தியும் நிணைப்பர். என்ன நண்பர்களே மனசுக்குள்ளே எங்கேயோ லேசா பயம் வருதா.