10 September, 2012

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது.கரிசலாங்கண்ணி தாவரம் முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ அதிகம் உள்ளன. எக்லிப்டால், வெடிலோலாக்டோன், டெஸ்மீத்தைல், ஸ்டிக்மாஸ்டீரால், ஹெப்டாகோசனால், ஹென்ட்ரை அக்கோன்டனால் போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.
கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம்.
1. வாரத்துக்கு இரண்டு நாள் கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
2. மஞ்சள் காமாலை குணமடையும். கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும் நன்மருந்து. கல்லீரல், மண்ணீரல் பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும். தோல்நோய்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.
அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால் இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

16 August, 2012

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் முழுவதும் பாலூட்டுவது தீங்கு தரும்: ஆய்வில் தகவல்

பிறந்த குழந்தைகளுக்கு சிறந்த உணவு தாய் பால். உணவை, மென்று தின்பதற்கு பற்கள் முளைக்காத காரணத்தினால் பச்சிளம் குழந்தைகள் திரவ நிலையிலேயே எடுத்து கொள்ள இயலும். அதற்கு இயற்கையாக கிடைக்க கூடியதும், ஆரோக்கியம் நிறைந்ததும் மற்றும் எவ்வித தீங்கு விளைவிக்காததுமான தாய் பாலே சிறந்த உணவாக அமையும். இதனை உலக சுகாதார அமைப்பு ஆனது கடந்த 2001-ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. மேலும் 2003ல் இங்கிலாந்தின் தொழிலாளர் அமைச்சர் ஹேசல் பிளியர்ஸ் இதனை ஏற்று கொண்டார். ஆனால் தற்போது இங்கிலாந்து மருத்துவ குழுவினை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர்கள் பலர் பிறந்த குழந்தைகள் தொடர்ந்து 6 மாதங்கள் வரை திட பொருள்கள் இன்றி வெறும் தாய் பால் மட்டும் உணவாக எடுத்து கொண்டால் அது ஆபத்து தரும் என கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுப்படி, தொடர்ந்து 6 மாதங்கள் வரை திட உணவு ஏதும் இன்றி திரவ உணவான தாய் பால் மட்டும் எடுத்து கொள்வதால் உடலில் போதிய இரும்பு சத்து கிடைக்காமல் போக வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் போதிய மூளை வளர்ச்சி இல்லாத நிலை, மனநலம் தொடர்பான வியாதிகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வளரும் போது உணவின் மீது ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படவும், எதிர்ப்பு சக்தி குறைந்து வேறு நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனினும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு திட உணவு கொடுப்பதற்கு முன்பு நல்ல மருத்துவரை கலந்தாலோசித்து பின்னர் செயல்படுத்துவது நன்று என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

23 July, 2012

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?


தெருவெல்லாம் மாம்பழம் குவியத் தொடங்கிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால் முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா! இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கு. தமிழ்நாட்டு மார்க்கெட்டுகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு பட்டியல் நீளமா போய்க்கிட்டே இருக்கும்.
மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் சத்தும், பங்கனப்பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.
அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா…? பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம் போதுமா! தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்…. மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஹையா ஜாலி! ஆய்வுகளே சொல்லிவிட்டன என்று இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.
100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி 70 கிலோ கலோரிகள்
கார்போஹைட்ரேட் 17.00 கிராம்
சர்க்கரை 14.08 கிராம்
நார்ச்சத்து 1.08 கிராம்
கொழுப்பு 0.27 கிராம்
புரதம் 0.51 கிராம்
வைட்டமின் ஏ 38 மைக்ரோ கிராம்
பீட்டா கரோட்டீன் 445 மைக்ரோ கிராம்
தையாமின்
(வைட்டமின் பி) 0.058 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின்
(வைட்டமின் பி2) 0.057 மில்லி கிராம்
நியாசின்
(வைட்டமின் பி3) 0.584 மில்லி கிராம்
பான்டோதெனிக்
அமிலம் (பி5) 0.160 மில்லி கிராம்
வைட்டமின் பி6 0.134 மில்லி கிராம்
போலேட்
(வைட்டமின் பி9) 14 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி 27.7 மில்லி கிராம்
கால்சியம் 10 மில்லி கிராம்
இரும்புச் சத்து 0.13 மில்லி கிராம்
மக்னீசியம் 9 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 11 மில்லி கிராம்
பொட்டாசியம் 156 மில்லி கிராம்
துத்தநாகம் 0.04 மில்லி கிராம்

08 July, 2012

தூக்கம் குறைவால் தாம்பத்ய வாழ்வில் பாதிப்பு ஏற்படும்?

அமெரிக்க மருத்துவ அமைப்பின் இதழொன்றில் தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது, நீண்ட நாட்கள் குறைவான நேரமே தூக்கம் மேற்கொள்வது ஆகியவற்றால் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அளவு குறைகிறது. இதனால் தாம்பத்யத்தில் ஆர்வம் குறைந்து போகிறது. மேலும், தசைகளில் தளர்ச்சி, வலுவிழந்த எலும்புகள், ஆற்றல் குறைந்து போதல் மற்றும் கவனமின்மை ஆகியவை ஏற்படுகின்றன. மேலும், இதனால் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டு இருதய வியாதிகள், ஸ்ட்ரோக் மற்றும் டையாபடீஸ் 2 ஆகியவையும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

13 June, 2012

வலி நிவாரணியாக செயலாற்றும் பால்!

பாலின் மகத்துவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏற்கனவே ஏகப்பட்ட தகவல்களை தெரிவித்துள்ள போதிலும், தற்போது பால் வலி நிவாரணியாகவும் செயல்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஒரு டம்ளர் பாலில் 20 வகையான வலி நிவாரணிகள் குணத்தை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மிக மிக நுட்பமாக மேற்கொண்ட ஆய்வில், மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கு மருந்தில் காணப்படும் இரசாயனங்கள், ஆடு, மாடு மற்றும் மனித பாலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஒரு டம்ளர் பாலை ஒருவர் அருந்தினால், அதில் இருக்கும் இரசாயனம் மிக மிக குறைவாகவே உள்ளது. ஆனால் அதன் பயன் அபரிதமாக உள்ளது.குறிப்பாக வலி நிவாரண விசயத்தில் அற்புத பங்காற்றுவதாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஸ்பானிஷ்-மொராக்கான் பகுதியை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழுவினர், அந்த பகுதிகளில் உள்ள பசு மாட்டு பால் மாதிரிகளை, ஆடு மற்றும் மனித பால் மாதிரிகளுடன் சேர்த்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தெரியவந்த உண்மை என்னவெனில், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுக்கப்படும் வலி நிவாரணியில் அடங்கியுள்ள எதிர்ப்பு அழற்சி மருந்து, "Mefenamic" அமிலம் மற்றும் "Ketoprofen" ஆகிய இரசாயனங்கள் அடங்கியுள்ளது என்பதுதான்.
மேலும் செக்ஸ் ஹார்மோனின் வடிவமாக உள்ள ஈஸ்ட்ரோஜனும் பாலில் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஆட்டுப்பாலில் "Niflumic" என்ற ஒரு வகையான அமிலம் இருப்பதும், இது தாய்ப்பாலில் உள்ள வலி நிவாரணி குணங்களை ஒத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

04 June, 2012

நினைவுத்திறனை அதிகரிக்கும் மிளகு

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. மிளகானது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம்,

இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன.
இவை அனைத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத் தொடர்ந்து செய்து முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு, புரதம், கனிமங்கள் உள்ளன. பிபிரைன், பெருபிரைன், பிபிரோனால், கேம்பினி, அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளாறு உடனே குணமாகிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது. காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது.
தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும்.
மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்
பல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வர சகல விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்க வைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
மிளகு இரசமும், மிளகு சேர்ந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.

15 May, 2012

மாதுளையின் மருத்துவ குணங்கள்

மாதுளையில் மொத்தம் மூன்று ரகம். அதில் அடர் சிவப்பு மற்றும் லேசான சிவப்பு நிறத்துடன் முத்துக்கள் போலவே காணப்படும் மாதுளை, பார்ப்பதற்கே அழகாக இருக்கும். இதில் புரதம்,

கொழுப்பு, மாவு, தாதுப் பொருள் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன.
1. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி: உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.

மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால், அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து, நாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது.

2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன்: மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

3. ஆண்மை பெருக: மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.

சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

4. கடுமையான இதய வலி நிற்க: மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.

5. வயிற்றுப் புண்கள் குணமாக: மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும். புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

6. பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாக: மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.

7. இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க: மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். 
8. டாக்டர். சுப்பிரமணி சேலம் அவர்களின் அவர்களின் கூடுதல் தகவல்... கற்பிணி பெண்கள் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிகப்பாக பிறக்குமாம்! கணவன் கருப்பாக இருந்தாலும் சந்தேகபடாமல் சாப்பிடலாம். குங்கும பூ வை விட அருமையான பயன் கிடைக்கும் என்கிறார்! சாப்பிட்டுத்தான் பாருங்களேன்!!

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...