16 August, 2012

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் முழுவதும் பாலூட்டுவது தீங்கு தரும்: ஆய்வில் தகவல்

பிறந்த குழந்தைகளுக்கு சிறந்த உணவு தாய் பால். உணவை, மென்று தின்பதற்கு பற்கள் முளைக்காத காரணத்தினால் பச்சிளம் குழந்தைகள் திரவ நிலையிலேயே எடுத்து கொள்ள இயலும். அதற்கு இயற்கையாக கிடைக்க கூடியதும், ஆரோக்கியம் நிறைந்ததும் மற்றும் எவ்வித தீங்கு விளைவிக்காததுமான தாய் பாலே சிறந்த உணவாக அமையும். இதனை உலக சுகாதார அமைப்பு ஆனது கடந்த 2001-ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. மேலும் 2003ல் இங்கிலாந்தின் தொழிலாளர் அமைச்சர் ஹேசல் பிளியர்ஸ் இதனை ஏற்று கொண்டார். ஆனால் தற்போது இங்கிலாந்து மருத்துவ குழுவினை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர்கள் பலர் பிறந்த குழந்தைகள் தொடர்ந்து 6 மாதங்கள் வரை திட பொருள்கள் இன்றி வெறும் தாய் பால் மட்டும் உணவாக எடுத்து கொண்டால் அது ஆபத்து தரும் என கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுப்படி, தொடர்ந்து 6 மாதங்கள் வரை திட உணவு ஏதும் இன்றி திரவ உணவான தாய் பால் மட்டும் எடுத்து கொள்வதால் உடலில் போதிய இரும்பு சத்து கிடைக்காமல் போக வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் போதிய மூளை வளர்ச்சி இல்லாத நிலை, மனநலம் தொடர்பான வியாதிகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வளரும் போது உணவின் மீது ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படவும், எதிர்ப்பு சக்தி குறைந்து வேறு நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனினும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு திட உணவு கொடுப்பதற்கு முன்பு நல்ல மருத்துவரை கலந்தாலோசித்து பின்னர் செயல்படுத்துவது நன்று என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு?

  சக்கரை... ஏன் சக்கரை... சர்க்கரைச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு? "சர்க்கரை இருந்தால் கிழங்கு சாப்பிடக்கூடாது... குறிப்பாக ச...