விறைக்க அடம்பிடிக்கும் ஆணுறுப்புக்கள்
பாலியல் தொடர்பில் ஆண்களினிடையே இருக்கும் ஒரு பொதுவான நோய் விறைக்க மறுக்கும் ஆணுறுப்புக்கள். ஆங்கிலத்திலே இது impotence எனப்படுகிறது.இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் , இளம் வயதிலே இந்த நிலை ஏற்படுவது, மனநிலை சம்பந்தப்பட்டது.
ஒரு இளம் ஆண் இந்த குறைபாட்டைக் கொண்டிருந்தால் அதற்குரிய காரணமாக இருக்கக் கூடியது,
- செக்ஸ் மீது அவருக்குரிய அச்ச மனநிலை.
- அளவுக்கதிகமான வேலைப் பளு மற்றும் மன அழுத்தம்
- தன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள்
- மன அழுத்த நோய்
- இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் கொள்ள முடியுமா என்றஅச்சமும் தன்னம்பிக்கை இல்லாமையுமே ஆகும்
இது தவிர வேறு பல காரணங்களாலும் இந்த நிலைமை ஏற்படலாம். ஆனால் இவை சற்று வயதானவர்களிலே ஏற்படுவதாகும்.அவையாவன,
- மது
- புகைத்தல்
- நீரழிவுநோய்
- உயர்குருதிஅமுக்கம்
- ஈரல்பாதிப்பு
- சிறுநீரகநோய்
- பாரிசவாதநோய்
- மனஅழுத்தநோய்
இது ஆணுறுப்பில் ரத்தத்தை தேக்கி வைப்பதன் மூலம் அதிக நேரம் விறைப்புத் தன்மையை பேண உதவுகிறது.
வயாக்ரா ஆனது 25mg, 50mg, 100mg என்ற அளவுகளிலே கிடைக்கப் படுகிறது.
வயாகரா மாத்திரை உட்கொண்டு அரை மணிநேரத்திலேயே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை அடைந்து விடும். இதனால்தான் இந்த மாத்திரை உடலுறவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளப் பட வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.
ஆனால் இந்த மாத்திரை கொழுப்பு நிறைந்த உணவுகளோடு உட்கொள்ளப் பட்டால் இது உறிஞ்சப்பட்டு ரத்தத்தை அடைவது தாமதமாகும்.
இதய நோயாளிகள் , குறிப்பாக அவர்கள் அவர்களுடைய இதய நோய்க்கு மாத்திரைகள் பாவிப்பவர்களேயானால் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்கவேண்டும் என்ன! சாப்பிடவே கூடாது.
இதய நோய்க்கு உட்கொள்ளும் சில மாத்திரைகளோடு வயாகரா உட்கொள்ளப் பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். குறிப்பாக ISMN /ISDN எனப்படும் மாத்திர வகை இருதய நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மாத்திரையாகும் இதனோடு வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.
வயகரா மாத்திரை உட்கொள்ளுபவர்கள் கீழ்வரும் பக்க விளைவுகளைக் கூட அனுபவிக்கலாம்,
- தலையிடி
- வயிற்று நோய்
- வாந்தி
- வாந்தி வரும் உணர்வு
- வயிற்றோட்டம்
- பச்சை மற்றும் நீல நிறங்களை வேறுபிரிக்க முடியாமை
போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
கீழே காணும் வஸ்து இயற்கை தந்த வயகரா! இதில் ஆபத்தானஎதிர் விளைவு எதுவும் இல்லை!
முருங்கை காய் |
நல்ல தகவல்கள் சார். சரியான புரிதல் இல்லாமல் வயாக்கராவை சிலர் விளையாட்டாக எடுத்துக் கொள்வதும் உண்டு.
ReplyDeleteஇவ்வளவு சிரமத்தை ஏத்துக்கிட்டு இதை சாப்பிடோனுமா.. ஆசைப்படறவங்க... சிந்திக்கனும்!
ReplyDeleteபயனுள்ள தகவல்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.