ஒரு கால்நடை மருத்துவர் 'அசை' போடுகிறார்!- 2எங்கள் கல்லூரியில் நடந்த என் மனதை மாற்றிய சம்பவம் என்றதும் எதோ சினிமா மாதிரி கற்பனையை வளர்க்க வேண்டாம்.... கால்நடை மருத்துவியல் (PHARAMACOLOGY) துறை, புகழ் பெற்ற GLAXO, HOECHST, ICI போன்ற நிறுவனங்களின் தயாரிக்கும் மருந்துகளை எங்களுக்கு அறிமுகம் செய்ய ஒரு கூட்டத்தை ஏற்பாடு பண்ணியிருந்தது. அதற்காக அன்றைய பம்பாயிலிருந்து GLAXO டாக்டர் செல்வகுமார், HOECHST சார்பாக டாக்டர் ராதாகிருஷ்னன், ICI டாக்டர் சுகுமார் என எனது மூத்த மாணவர்களாக பார்த்தவர்கள் சூட் அணிந்து, காலை விமானத்தில் சென்னை வந்தது பற்றியும், தங்கியிருந்த 5 நட்சத்திர ஹோட்டல் பற்றியும், (அந்த காலக் கட்டத்தில் விமான பயணமென்பது ராக்கெட்டில் செல்வதற்கு சமமாக கருதிக் கொண்டிருந்த ஒரு காலம்..!) அவர்கள் பேசிக் கொண்டதை கண்ட போதுதான் எனக்கு, கால் நடை தொழிலின் இன்னொரு பரிமாணம் தெரிய ஆரம்பித்தது. அவர்களை நான் ஒரு ரோல் மாடலாக காண ஆரம்பித்தேன். அவர்களது உருவத்தில் என்னை கனவு காண ஆரம்பித்தேன்.
30 October, 2011
நன்றிகள் பலமுறை சொல்லி......................தொடர்கின்றது.
27 October, 2011
நன்றிகள் பலமுறை சொல்லி......................
ஒரு கால்நடை மருத்துவர் 'அசை' போடுகிறார்!-1
நம் (சென்னை கால்நடை மருத்துவ ) கல்லூரியிலிருந்து ஒரு இள நிலை பட்டம் பெற்றவனாக 1981-ல் வெளிவந்த நான், ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மாணவனாக, இளைமையை மீள பெற்று , அனுபவத்தை பாட புத்தகங்களாக சுமந்து நம் கல்லூரிக்குள் நுழைவது மாதிரியான ஒரு மன நிலையுடன் உங்களையெல்லாம் இந்தப்பக்கம் மூலம் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த டாக்டர் ராஜேந்திரனுக்கு எனது நன்றிகள் பலமுறை சொல்லி, தொடர்கின்றேன்..........என்னைப் பற்றி சொல்லிக் கொள்வதற்காக இப்பக்கத்தை எடுத்துக் கொள்வதை விட( எனக்கு தற்பெருமை என்பது துளிக்கூட கிடையாது , பிளீஸ் நம்புங்கள்! ) என் வித்தியாசமான தொழில் அனுபவங்களை இன்றைய இளம் கால் நடை மாணவர்கள், மற்றும் மருத்துவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதன் மூலமாக நமது கால்நடை மருத்துவத் துறையின் இன்னொரு பரிமாணத்தையும், ஒரு பயன் பாட்டையும் இப்பக்கம் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எனது அனுபவங்கள் மற்றவர்களுக்கும் பயன்படலாம் என நம்பி பகிர்ந்துகொள்ள வரிந்துகட்டி கிளம்பிவிட்டேன்.
1975 -ம் ஆண்டு அந்த முதல் நாள் , எங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது எல்லோரையும் போல், கால் நடைகளின் நலம் காக்கும் ஒரு உன்னதமான கால் நடை மருத்துவராக பணி புரியும் ஒரு கனவோடுதான் நானும் இருந்தேன்.......இருந்தேன்.....1980-ம் ஆண்டில் (ஐந்தாம் ஆண்டின் இறுதிப் பகுதியில் படித்துக் கொண்டிருந்தபோது) ஒரு மாலைப் பொழுதின் வரை.....! என் மனதில் மாற்றங்களை கொண்டு வந்த அந்த சம்பவம் எங்கள் கல்லூரி யின் ஒரு வகுப்பறையில்தான் நடந்தது. அது....
தொடரும்...........................................................................
26 October, 2011
நீங்கள் வித்தியாசமானவரா? இதை செய்யுங்கள்!
மிக அவசரம். இரண்டு வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக O - ரத்தம் தேவை. உடனே தொடர்பு கொள்ளுங்கள், முருகன் - 99999 99999. என்ற செய்தி கிடைக்கப்பெற்றால், எவ்வளவோ அவசியமில்லாத செய்திகளையெல்லாம் forward செய்கிறோம். இந்த செய்தியையும் forward செய்தால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்படும்.என்ற நல்ல என்னத்தில் நாமும் செய்தியை பலருக்கும் அனுப்புகிறோம்.
| Reactions: |
24 October, 2011
ஆறாத புண் ஆற்றும் அரளி!
நம் உள் உறுப்புகளை பலவித நுண்கிருமிகளிலிருந்தும், ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களிடமிருந்தும், சீதோஷ்ண மாற்றங்களிலிருந்தும் காக்கும் தோலின் உணர் நரம்புகள் செயல்படாமல் போனால் ஆறாத அழுகும் புண்கள் உடல் முழுவதும் தோன்றிவிடும்.
நமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள் ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர் நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர் நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறைய ஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாத புண்களாக மாற ஆரம்பிக்கின்றன.
நமது உடலின் புற உறுப்புகளான கை மற்றும் கால் விரல்களில் உணர் நரம்புகள் ஏராளமாக கூடியுள்ளன. சில காரணங்களால் தோலுக்கு அடியில் சூழ்ந்துள்ள உணர் நரம்புக் கூட்டம் பாதிக்கப்படும் போது சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த உணர் நரம்புகள் பாதிப்படைந்துவிடுகின்றன. அதனை தொடர்நது தொடு உணர்ச்சி குறைய ஆரம்பித்து, அவ்விடங்களில் ஒருவித மரத்துப்போன் உணர்ச்சி தோன்றி, ஆறாத புண்களாக மாற ஆரம்பிக்கின்றன.
Labels:
அறிவியல்,
இயற்கை மருத்துவம்
| Reactions: |
22 October, 2011
சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ வைத்துக் கொள்ளலாமா?
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!
| Reactions: |
18 October, 2011
கொன்றுவிடும் காமம்!
ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை பாலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற ஆண் தேனீக்களை வென்று ராணித் தேனீயுடன் பாலுறவு கொள்ளும். பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும்.
இதனால் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் கருவுற்ற முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கும்.
இதனால் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் கருவுற்ற முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கும்.
Labels:
அறிவியல்,
தொழில்நுட்பம்
| Reactions: |
அசோலா ஒரு சூப்பர் தீவனம்
கால்நடைகளுக்கு ஒரு அற்புதமான புரதச்சத்து உணவு அசோலா ஏன் நமக்கும் கூடத்தான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அசோலா இப்போது வளர்க்கப்படுகிறது. தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழகாக பெயர் வைத்தும் அழைக்கப்படுகிறது.
. எப்போதும் கிடைக்கும் பசுந்தீவனங்கள் இல்லாதபோது அசோலா வளர்த்து கால்நடைகளுக்கான பசுந்தீவன தேவையை சமாளிக்கலாம்.
அசோலா தண்ணீரில் மிதந்து வளரும் ஒரு சிறிய பெரணி வகைத் தாவரம்.
வட்ட வடிவ சிறிய இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த்து போல் இருக்கும் இதன் இலைகள் 3-4 செ.மீ. அளவு இருக்கும்.
தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.
இலையின் மேற்பரப்பில் உள்ள ஹெட்டிரோசைட் எனப்படும் வெற்றிடத்தில் அன்பீனா அசோலா என்ற நீலப்பச்சைப்பாசி வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை எடுத்து அசோலாவில் சேமிக்கின்றது.
| Reactions: |
16 October, 2011
தூக்கமின்மையால் ‘செக்ஸ் மீதான விருப்பம் குறைவு’! ஏற்படும்.
உடல் மற்றும் மன ரீதியான பலவீனத்தையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் நடவடிக்கைகளையும் கடுமையாக நீண்ட கால அளவில் பாதிக்க கூடியதாகும்.
மனிதர்களின் தினசரிச் செயல்களில் குறிப்பிடத்தக்கது, தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கி ஓய்வெடுக்கவில்லையெனில், மறுநாள் ஒழுங்காக வேலை பார்க்க முடியாது.
| Reactions: |
15 October, 2011
மிளகாய்: மருத்துவத்திலும் பயன்படுகிறது!
காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என
மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – ( விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – ( விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
Labels:
அறிவியல்,
இயற்கை மருத்துவம்
| Reactions: |
11 October, 2011
காடை வளர்த்து காசு பார்ப்போம்!
|
Labels:
அறிவியல்,
காடை,
தொழில்நுட்பம்
| Reactions: |
பார்வைக்கு பலம் சேர்க்கும் பால்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் (நம்ம ஊர் பெண்கள் வேண்டுமென்றே தெரியாது போல் காட்டிக்கொள்வது இதில் சேராது) போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது. பிரிட்டனில் வருடத்திற்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 1,313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் டி வைட்டமின் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் டி வைட்டமின் அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது தெரிய வந்தது. குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது. (இனி நம் பெண்கள் சாதார வெயிலுக்கே குடைபிடிப்பதை தவிர்கவேண்டும் போல் தெரிகிறது) எனவே, பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. பின்குறிப்பு: மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பயன் தரும் என்பதும் முன்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| Reactions: |
09 October, 2011
கையும் கலவியும்!
| Reactions: |
08 October, 2011
`நேத்து வச்ச மீன் குழம்பு… நல்லதா?!
மீன் குழம்பை பொருத்தவரை வைத்த அன்றே ருசித்தால் சுவையில்லை! அடுத்த நாள் அந்த மீன் குழம்பு மசாலாவில் ,சக்கரை பாவில் ஊறும் குலாப்ஜாமூன் கணக்காக மீன் துண்டுகள் ஊறி செழுமையாக வாசனையாக வா வா கவர்ந்து அழைக்கும் மீன் குழம்பை சுடு சாத த்தின் தலையின் ஊற்றி ஒரு பிசை பிசைந்து ஒரு கவளம் சாதம் பசைந்து மற்றும் மீன் துண்டுக்கு வலிக்காமால் பதமாக இரு உதடுகளை கொண்டு பதமாக கவ்வி மெது மெது மீன் சதை பகுதியை முள் படாமல் உள்ளே தள்ளும் போது ஆஹா.... அந்த மணமும் ருசியும் எந்த குழம்புக்கு வரும் என அனுபவித்த ரசனையாளர்கள் ஜொல்லுடன் கூறுவதுண்டு.
| Reactions: |
06 October, 2011
உங்க பிளட் குரூப் என்ன ?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன.
இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல்டோனர்’ என்று பெயர்.
ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், Aகுரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன்இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.
ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
Labels:
அறிவியல்,
தொழில்நுட்பம்
| Reactions: |
04 October, 2011
முதல் இரவில் பால் ஏன்?
உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப் படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் பல வகைகள் உண்டு.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.
தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது.எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.
தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது.எருமைப்பால் அதிகப் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச்சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
Labels:
அறிவியல்,
இயற்கை மருத்துவம்,
உடல்நலம்
| Reactions: |
02 October, 2011
குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்?

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முக்கியமான உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது அது இருவருக் குள்ளும் ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. இந்த நெருக்கமில்லாத குழந்தைகளே அதிகமாக விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கு இப்படியான பழக்கம் அதிகம் உள்ளது.
Labels:
அறிவியல்,
உடல்நலம்,
குழந்தைகள் நலம்
| Reactions: |
01 October, 2011
ஏண்டா பக்கியாட்டம் அலையறே ? இது ஒரு பறவையை பற்றியது!
ஒரு பொருள் தனக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக ‘லோ லோ’ என்று அலைபவனை “ஏண்டா பக்கியாட்டம் அலயறே ?” என்று கேட்பார்கள்.
பக்கி என்றே ஒரு பறவை உண்டு. அதுதான் ஆங்கிலத்தில் நைட்ஜார் (Nightjar) என்றழைக்கப் படும் பறவை. இதற்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் மற்றுமொரு பெயரும் உண்டு. தமிழில் பாதுகைக் குருவி என்றும் ஆங்கிலத்தில் கோட் ஸக்கர் (Goat sucker) என்றும் இதனை அழைக்கின்றனர்.
விஞ்ஞான ரீதியாக இதற்கு அளிக்கப்பட்ட பெயர் கேப்ரிமல்கஸ் ஏஷியாடிகஸ் (Caprimulgus asiaticus) என்பதாகும். கேப்ரிமல்கஸ் என்றால் லத்தீன் மொழியில் ஆட்டுப் பால் உரிஞ்சி என்று பொருள்.
Labels:
அறிவியல்,
தொழில்நுட்பம்,
பறவைகள்
| Reactions: |
Subscribe to:
Posts (Atom)






