30 October, 2011

நன்றிகள் பலமுறை சொல்லி......................தொடர்கின்றது.

Ajmal | 4:35 PM | | Best Blogger Tips
ஒரு கால்நடை மருத்துவர் 'அசை' போடுகிறார்!- 2எங்கள் கல்லூரியில் நடந்த என் மனதை மாற்றிய சம்பவம் என்றதும் எதோ சினிமா மாதிரி கற்பனையை வளர்க்க வேண்டாம்.... கால்நடை மருத்துவியல் (PHARAMACOLOGY) துறை, புகழ் பெற்ற  GLAXO, HOECHST, ICI  போன்ற நிறுவனங்களின் தயாரிக்கும் மருந்துகளை எங்களுக்கு அறிமுகம் செய்ய ஒரு கூட்டத்தை ஏற்பாடு பண்ணியிருந்தது. அதற்காக அன்றைய பம்பாயிலிருந்து GLAXO டாக்டர் செல்வகுமார், HOECHST சார்பாக டாக்டர் ராதாகிருஷ்னன், ICI டாக்டர் சுகுமார் என எனது மூத்த மாணவர்களாக பார்த்தவர்கள் சூட் அணிந்து, காலை விமானத்தில் சென்னை வந்தது பற்றியும், தங்கியிருந்த 5 நட்சத்திர ஹோட்டல் பற்றியும், (அந்த காலக் கட்டத்தில் விமான பயணமென்பது  ராக்கெட்டில் செல்வதற்கு சமமாக கருதிக் கொண்டிருந்த ஒரு காலம்..!) அவர்கள் பேசிக் கொண்டதை கண்ட போதுதான் எனக்கு, கால் நடை தொழிலின் இன்னொரு பரிமாணம் தெரிய ஆரம்பித்தது. அவர்களை நான் ஒரு ரோல் மாடலாக காண ஆரம்பித்தேன். அவர்களது உருவத்தில் என்னை கனவு காண ஆரம்பித்தேன்.



அதன் விளைவாக படித்து முடிந்ததும் என் வீடு தேடி வந்த வேலூர் அரசாங்க பணி, ஊட்டி பால்வளத் துறையின் பணி என யாவையும் உதறித் தள்ளிவிட்டு,  ஆல்வெட் என சென்னையை சேர்ந்த ஓர் கால் நடை டாக்டர்களால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு மருந்து நிறுவனத்தில் 1982-ம் ஆண்டின் முதல் நாள் 750 ரூபாய் சம்பளத்தில் சேரந்தேன்.  கூடவே 'பைத்தியக்காரன்' என்ற பட்டத்தையும் B.V.Sc. யுடன் பெற்றேன். காரணம் அப்போது அரசாங்க பணியில் சம்பளம் 2000 த்தை தாண்டியது மட்டுமில்லாமல், படித்து முடித்தவர்களுக்காக  பணிகள் கல்லூரி வாசலில் காத்து நின்றது.

என் வகுப்பு தோழர்கள் யாவரும் அரசாங்க பணியில் 'பந்தாவாக' ( ஆனால் அவர்கள் படும்பாடு தனி கதையாக எழுதலாம் )அமர்ந்த போது, அவர்களது அறையின் வெளியே அவர்களை சந்தித்து என் மருந்துகளை விற்பதற்காக காத்துக் கொண்டிருந்த் நிலை.  பையைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராக ரயிலிலும், பஸ்ஸிலும் தமிழ் நாடெங்கும் சுற்றித் திரிந்தேன். எல்லோருமே "எனக்கு இந்த நிலைமை தேவையா?" என்பதை சொல்லாமல் சொன்னார்கள். அந்த நேரம் கோவை பால்வளத் துறையில் சேர்ந்து அன்னூர் என்ற அழகான ஒரு ஊரில் பணி புரிந்து கொண்டிருந்த என் வகுப்பு தோழன், அவனது காரிலேயே சுற்றியிருந்த எல்லா கால் நடை மையங்களுக்கும் அழைத்துச் சென்று என்னையும், என் மருந்துகளையும் அறிமுகப் படுத்தி என் விற்பனைகளுக்கு ரொம்ப உதவியாக இருந்ததை இந்தத் தொடரின் தலைப்பின் படி 'நன்றிகள் பலமுறை அவனுக்கு' சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகின்றேன். அவனை இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.  அவன் 'ஜே.பி. என எல்லோராலும் அறியப்பட்ட அறுவை சிகிச்சை மன்னன் Dr. Jayaprakash.

இப்படியாக ஆரம்பித்த என் தொழில் பயணம் என்னை இரு வருடங்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அங்கே ஏற்பட்ட இனக் கலவரத்தால் மீண்டும் தாயகம் திரும்பி தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா & கர்னாடகம் என தென்னிந்தியா முழுதும் நாளொரு மாநிலம், பொழுதொரு ஊர் என சுற்றித் திரிந்த என்னை 1986ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு ஆங்கில தினசரியில் வந்த ஒரு விளம்பரம் ஈர்த்தது. அது.....

தொடரும்........   முன்பகுதி பார்க்க

3 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடர் வேகம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. வெகுசுவராசியம். தொடருங்கள்!

A.sivanesan said...

super ,வெகுசுவராசியம். தொடருங்கள்!

A.sivanesan said...

super, வெகுசுவராசியம். தொடருங்கள்!

Post a Comment

வந்தது வந்துவிட்டீர்கள்,என்ன அவசரம்! கருத்தை பகிர்ந்து செல்லுங்கள்!! எங்கள் ஆக்கத்திற்கு ஊக்கம் அளிக்கும்.